தேசிய செய்திகள்

தீவிர நோய் பாதிப்பு பகுதியான கேரளா..! - ஆய்வில் தகவல் + "||" + Kerala impact of serious illness Information in the study

தீவிர நோய் பாதிப்பு பகுதியான கேரளா..! - ஆய்வில் தகவல்

தீவிர நோய் பாதிப்பு பகுதியான கேரளா..! - ஆய்வில் தகவல்
விலங்குகளால் அதிகளவில் நோய் பரவும் தீவிர பாதிப்பு பகுதியாக சீனாவை தொடர்ந்து கேரளா உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,

விலங்குகளால் ஏற்படும் நோய் பாதிப்பு குறித்த ஆய்வில் இத்தாலி, அமெரிக்கா, நியூசிலாந்து நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.   அதில், பூமியின் பயன்பாட்டில் ஏற்பட்ட மாற்றமும், கால்நடை புரட்சியும் வவ்வால்களிடமிருந்து வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு காரணமாக உள்ளதாக கூறப்படுகிறது.  காடுகளின் அழிவு, செல்ல பிராணிகளின் நெருக்கம் உள்ளிட்டவை விலங்கியல் நோய்கள் ஏற்பட முக்கிய காரணங்களாகவும் உள்ளன. 

பாலூட்டிகளாலும் நோய் பரவுவதாகவும், இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொரோனா வைரஸ்களால் நோய் பரவுவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பாலூட்டிகளில் வைரஸின் முக்கிய காரணியாக வெளவ்வால்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  

இந்த நிலையில் சீனா, கேரளா, ஜாவா, பூடான், கிழக்கு நேபாளம் மற்றும் வடகிழக்கு இந்தியா ஆகியவை தீவிர நோய் பாதிப்பு பகுதிகளாக உள்ளன. கேரளாவில் அதிக மழைப்பொழிவு  மற்றும் மேற்குதொடர்ச்சிமலை காடுகள் இருப்பதால் விலங்கியல் நோய்கள் பரவுவதாகவும், பழங்களுக்காக வவ்வால்கள் குடியிருப்பு பகுதிக்கு ஈர்க்கப்படுவதால் மனிதனுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நிபா வைரஸ் பரவியது எப்படி..? - சிறுவன் சாப்பிட்ட ரம்புட்டான் பழம் ஆய்வு
ஆடுகளை மேய்க்க சிறுவன் சென்ற வனப்பகுதியில் வவ்வால்கள் இருப்பதால் அதன் மூலம் வைரஸ் பரவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
2. கோடநாடு வழக்கு: கேரளாவில் உள்ள 8 பேரை விசாரிக்க போலீசார் திட்டம்!
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய கேரளாவில் உள்ள 8 பேரையும் அழைத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
3. கொரோனா பரவல் அதிகரிப்பு: கேரளாவில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடு அமல்
கேரளாவில் முழு ஊரடங்கு காரணமாக நேற்று சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.
4. கேரளாவில் வரும் திங்கள் கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு- பினராயி விஜயன் அறிவிப்பு
கேரளாவில் வரும் திங்கள் கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு- பினராயி விஜயன் அறிவித்துள்ளது.
5. கேரளாவில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு; மத்திய அரசு எச்சரிக்கை
ஓணம் பண்டிகைக்காக அனுமதிக்கப்பட்ட தளர்வுகள் காணரமாக கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.