தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம்; தேவஸ்தானம் அறிவிப்பு + "||" + Free Darshan at Tirupati Ezhumalayan Temple; Temple Announcement

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம்; தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம்; தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது. 300 ரூபாய் கட்டணத்தில் முன்பதிவு செய்த பக்தர்கள் மற்றும் வி.ஐ.பி. தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், உண்டியல் காணிக்கை கோடிக்கணக்கில் வசூலானது.  முடி காணிக்கைக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன அறிவிப்பினை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டு உள்ளது.

இதன்படி, சித்தூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு நாளை காலை 6 மணி முதல் சோதனை அடிப்படையில் டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பஞ்சாப்பில் மழை சேதம்; பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு அறிவிப்பு
பஞ்சாப்பில் மழையால் பயிர்கள் சேதமடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்கும் என துணை முதல்-மந்திரி தெரிவித்து உள்ளார்.
2. நடிகர் விவேக் மரணத்துக்கு தடுப்பூசி காரணம் இல்லை மத்திய அரசு அறிவிப்பு
நடிகர் விவேக் மரணத்துக்கு தடுப்பூசி காரணம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
3. கேரளா பெருவெள்ளத்தையொட்டி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: பினராயி விஜயனிடம் ரூ.1 கோடிக்கான காசோலை
கேரளா பெருவெள்ளத்தையொட்டி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: பினராயி விஜயனிடம் ரூ.1 கோடிக்கான காசோலை தி.மு.க. எம்.பி.க்கள் நேரில் சென்று வழங்கினர்.
4. அருண்ராஜா காமராஜ் - உதயநிதி கூட்டணியில் உருவாகும் படத்தின் தலைப்பு அறிவிப்பு
2019-ம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற ‘ஆர்ட்டிகில் 15’ படத்தின் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார்.
5. காஷ்மீரில் தொழிலாளர்கள் படுகொலை; ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவிப்பு
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதிகளால் உயிரிழந்த தொழிலாளர்களின் உறவினர்களுக்கு பீகார் முதல் மந்திரி ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவித்து உள்ளார்.