தேசிய செய்திகள்

மம்தா பானர்ஜியை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தப் போவது இல்லை; காங்கிரஸ் + "||" + Congress Changes Stand, Says Won't Contest Bypoll Against Mamata Banerjee

மம்தா பானர்ஜியை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தப் போவது இல்லை; காங்கிரஸ்

மம்தா பானர்ஜியை எதிர்த்து  வேட்பாளரை நிறுத்தப் போவது இல்லை; காங்கிரஸ்
மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வருகிற 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
கொல்கத்தா,

மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடந்தது. இதில், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். 

இருப்பினும் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றதால், மம்தா பானர்ஜி முதலமைச்சரானார். 6 மாதங்களுக்குள் அவர் எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்க வேண்டும் என்ற சூழலில், மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வருகிற 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த இடைத்தேர்தலில், பபானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடுவார் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. 

பபானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்துமா?என்பதில் பல்வேறு யூகங்கள் வெளியாகி வந்த நிலையில்,  வேட்பாளரை நிறுத்தப் போவது இல்லை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது குறித்து மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவரும் எம்.பியுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், “ மம்தா பானர்ஜிக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவது பாஜகவுக்கு மறைமுகமாக உதவுவது போல் இருக்கும். ஆகவே,எங்களின் கட்சி தலைமை இதை விரும்பவில்லை”  என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. மோடி படிப்பறிவு இல்லாதவர் ; ராகுல்காந்தி போதைப்பொருள் விற்பவர்: காங்கிரஸ்-பா.ஜ.க கலாட்டா அரசியல்
பிரதமர் மோடியின் சர்ச்சைக்குரிய டுவீட்டை கட்சியின் சமூக ஊடக குழு நீக்கியதாக டி.கே.சிவகுமார் பின்னர் அறிவித்தார்
2. உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்: 40 % பெண்களுக்கு வாய்ப்பு -பிரியங்கா காந்தி உறுதி
பாஜக ஆட்சி நடைபெற்று வரும் உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
3. சாதி அரசியலில் காங்கிரஸ் ஈடுபடவில்லை - டி.கே.சிவக்குமார் பேட்டி
சாதி அரசியலில் காங்கிரஸ் ஈடுபடவில்லை என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
4. முழு நேர காங்கிரஸ் தலைவராக இருக்க தயார்... ஆனால்...! - சோனியாகாந்தி பேச்சு
நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக இருப்பதற்கு அடையாளம் தான் பல ஆண்டுகளாக சேமித்த இந்திய சொத்துக்களை விற்கும் மத்திய அரசின் முடிவு என சோனியாகாந்தி கூறினார்.
5. வெல்டிங் பற்றவைப்பு பெட்டி வெடித்து நான்கு ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் காயம்
மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களில் ஒருவர் - ஒரு தலைமை காவலர் - ராய்பூரில் உள்ள நாராயணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.