தேசிய செய்திகள்

உத்தரபிரதேசம்: சுவர் இடிந்து விழுந்து 3 குழந்தைகள் பலி + "||" + 3 children die in wall collapse in Amethi

உத்தரபிரதேசம்: சுவர் இடிந்து விழுந்து 3 குழந்தைகள் பலி

உத்தரபிரதேசம்: சுவர் இடிந்து விழுந்து 3 குழந்தைகள் பலி
உத்தரபிரதேசத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் விளையாடிக்கொண்டிருந்த 3 குழந்தைகள் உயிரிழந்தனர்.
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்தது. கனமழையால் பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் சேதமடைந்தன.

இந்நிலையில், அமேதியின் தோடர்பூர் மஜ்ரி ஜமூர்வன் கிராமத்தை சேர்ந்த 5 குழந்தைகள் தங்கள் கிராமத்தில் உள்ள ஒரு வீடு அருகே விளையாடிக்கொண்டிருந்தனர். கனமழையால் அந்த வீடு மிகுந்த சேதமடைந்திருந்த நிலையில் திடீரென வீட்டின் சுவர் இடிந்து விளையாடிக்கொண்டிருந்த 5 குழந்தைகள் மீது விழுந்தது.

இந்த விபத்தில் குழந்தைகள் 5 பேரும் சுவர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் சுவர் இடிபாடுகளுக்குள் சிக்கிய 5 குழந்தைகளையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் குழந்தைகளை பரிசோதனை செய்த டாக்டர் 3 குழந்தைகள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

உயிரிழந்த குழந்தைகளின் பெயர்கள் முறையே திவ்யஷின் (6), வன்ஷூ (8) மற்றும் சத்யம் (10) ஆகும். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. உத்தரபிரதேசத்தில் ஜிகா வைரசை கட்டுப்படுத்த மத்திய குழு விரைந்தது
உத்தரபிரதேசத்தில் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது.
2. ரூ.3 கோடி வருமான வரி செலுத்த கோரி ரிக்‎ஷா தொழிலாளிக்கு நோட்டீஸ்
அக்டோபர் 19ஆம் தேதி அவருக்கு வருமான வரித்துறையிடமிருந்து அழைப்பு வந்து உள்ளது. அதில் அவர்கள் ரூ.3,47,54,896 ஐ வருமான வரி செலுத்துமாறு கூறி உள்ளனர்.
3. ‘நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த புதிய திட்டம்’ இன்று தொடக்கம் !
‘பிரதான் மந்திரி ஆத்மநிர்பார் ஸ்வஸ்த் பாரத் யோஜனா’ திட்டத்தை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
4. உத்தரபிரதேசம்: மத வழிபாட்டு நிகழ்ச்சியில் ‘பாகிஸ்தான் வாழ்க’ என கோஷம் எழுப்பிய 3 பேர் கைது
உத்தரபிரதேசத்தில் மத வழிபாட்டு நிகழ்ச்சியின் போது ‘பாகிஸ்தான் வாழ்க’ என கோஷம் எழுப்பிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5. போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து கல்லூரியில் சேர்ந்த வழக்கு:பாஜக எம்.எல்.ஏ.வுக்கு 5 ஆண்டுகள் சிறை
போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து கல்லூரியில் சேர்ந்த வழக்கில் பாஜக எம்.எல்.ஏ.வுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.