தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் இலவச தரிசனம் - தேவஸ்தானம் அறிவிப்பு + "||" + Free darshan at Tirupati Ezhumalayan temple today - Devasthanam announcement

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் இலவச தரிசனம் - தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் இலவச தரிசனம் - தேவஸ்தானம் அறிவிப்பு
சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் திருப்பதி கோவிலில் இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து தொற்று பரவல் குறைந்ததன் காரணமாக தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். 

கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக 300 ரூபாய் கட்டண தரிசனம் மற்றும் முக்கிய நபர்கள் தரிசனம் மட்டும் நடைபெற்று வந்தது. தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் வீதம் கட்டண தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் சுமார் 4 மாதங்களுக்கு பிறகு இன்று (புதன்கிழமை) முதல் இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதில் முதல் கட்டமாக உள்ளூரை சேர்ந்த அதாவது சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த 2,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 27 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 27 ஆயிரத்து 176 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
2. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துலாபாரம் கொடுத்து ஜெகன்மோகன் ரெட்டி வழிபாடு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தனது எடைக்கு நிகரான அரிசியை துலாபாரம் கொடுத்து ஜெகன்மோகன் ரெட்டி வழிபாடு செய்தார்.
3. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.1 கோடியே 71 லட்சம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.1 கோடியே 71 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
4. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
5. திருப்பதி கோவிலில் 27 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகை
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் உண்டியல் வருமானம் ரூ.2.41 கோடி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.