தேசிய செய்திகள்

ராகுல் காந்தி இன்று ஜம்மு பயணம்: மாதா வைஷ்ணோ தேவி கோயிலில் தரிசனம்! + "||" + Rahul Gandhi's Jammu visit begins today, to go to Mata Vaishno Devi on foot from Katra

ராகுல் காந்தி இன்று ஜம்மு பயணம்: மாதா வைஷ்ணோ தேவி கோயிலில் தரிசனம்!

ராகுல் காந்தி இன்று ஜம்மு பயணம்: மாதா வைஷ்ணோ தேவி கோயிலில் தரிசனம்!
ராகுல் காந்தி 2 நாள் பயணமாக இன்று ஜம்மு பயணம் மேற்கொள்கிறார். அங்கு மாதா வைஷ்ணோ தேவி கோயிலில் தரிசனம் செய்ய உள்ளார்.
ஜம்மு, 

அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக இன்று ஜம்மு செல்கிறார். காட்ராவில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி குகைக்கோவிலில் வழிபடும் ராகுல், கட்சி தலைவர்கள், தொண்டர்களுடனும் உரையாடுவார் என ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நேற்று தெரிவித்தார்.

 ஜம்முவுக்கு வருகை தரும் ராகுலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று நேரே வைஷ்ணவி தேவி கோவிலுக்கு சென்று வழிபடும் ராகுல் காந்தி, நாளை ஜம்முவில் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களுடன் உரையாடுவார். பிற்பகலில் அவர் டெல்லி புறப்பட்டுச் செல்வார் என்று அவர் கூறினார். இதற்கிடையில் ஜம்மு காஷ்மீருக்கான காங்கிரஸ் கட்சி பொறுப்பாளரான ரஜ்னி பாட்டீல் நேற்று முன்தினம் ஜம்மு வந்தார். ராகுல் காந்தி வருகையையொட்டி செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை அவர் ஆய்வு செய்தார்.

ரஜ்னி பாட்டீல் தலைமையில் நடைபெற்ற ஒரு உயர்மட்ட குழு கூட்டத்தில், ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் குலாம் அகமது மிர் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். அவர்கள், ராகுல் வருகையையொட்டி செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் தொடர்பான விவரங்களை ரஜ்னி பாட்டீலிடம் விளக்கினர் என செய்தித் தொடர்பாளர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நீதி கிடைக்கும் வரை சத்தியாகிரகம் தொடரும்: ராகுல் காந்தி
ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா ஆகியோர் உ.பி.யில் உள்ள விவசாயிகளின் குடும்பங்களை நேரில் சந்தித்தனர்.
2. உத்தர பிரதேசத்தில் அமைதியை சீர்குலைக்க ராகுல் காந்தி முயற்சி: பாஜக குற்றச்சாட்டு
லகிம்பூர் வன்முறை தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பாஜக விளக்கம் அளித்துள்ளது.
3. லகிம்பூர் செல்ல ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு
வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க செல்லும் அரசியல்வாதிகளுக்கு உத்தர பிரதேச அரசு அனுமதி அளிக்க மறுத்து வருகிறது.
4. இந்திய மக்களிடையே உள்ள பிணைப்பை பிரதமர் மோடி உடைக்கிறார்: ராகுல் காந்தி தாக்கு
இந்திய மக்களிடையே உள்ள பிணைப்பை பிரதமர் மோடி உடைக்கிறார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
5. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு; ஜம்முவில் சுற்றுலா துறைக்கு புத்துயிரூட்ட நடவடிக்கை
கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஜம்முவில் சுற்றுலா துறைக்கு புத்துயிரூட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.