தேசிய செய்திகள்

எடியூரப்பாவை பா.ஜனதா புறக்கணிக்கிறதா? மத்திய மந்திரி ஏ.நாராயணசாமி பேட்டி + "||" + B S Yediyurappa not ignored in BJP, claims Union Minister A. Narayanasamy

எடியூரப்பாவை பா.ஜனதா புறக்கணிக்கிறதா? மத்திய மந்திரி ஏ.நாராயணசாமி பேட்டி

எடியூரப்பாவை பா.ஜனதா புறக்கணிக்கிறதா? மத்திய மந்திரி ஏ.நாராயணசாமி பேட்டி
மத்திய சமூகநீதித்துறை இணை மந்திரி ஏ.நாராயணசாமி சித்ரதுர்காவில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவை பா.ஜனதா மேலிடம் புறக்கணிக்கவில்லை. அவருக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவரது பெயரை கூறிக்கொண்டு அரசியல் செய்வதை தவிர்க்க முடியாது. தொண்டர் படையுடன் அரசியல் செய்து அடுத்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவை வெற்றி பெற வைப்போம். மக்கள் ஆசி யாத்திரையில் கூட்டம் கூட்டியது தவறு தான். ஆனால் அந்த யாத்திரையால் கொரோனா பரவல் அதிகரிக்கவில்லை. விநாயகர் சதுர்த்தியின்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். கொரோனா தடுப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். ஆன்மிக விஷயத்தை முன்வைத்து அரசின் விதிமுறைகளை மீறுவது சரியாக இருக்காது. பா.ஜனதா தொண்டர்கள் கட்சி. ஒரு தலைவரை மையப்படுத்தி செயல்படும் கட்சி அல்ல. இதுவரை கூட்டு தலைமையின் கீழ் தான் பா.ஜனதா தேர்தலை சந்தித்து வந்துள்ளது.

இவ்வாறு ஏ.நாராயணசாமி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரஸ் ., பா.ஜனதா ஆட்சியில் நடந்த வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்க தயாரா? பசவராஜ் பொம்மைக்கு, சித்தராமையா சவால்
கர்நாடகத்தில் காங்., பா.ஜனதா ஆட்சியில் நடந்த வளர்ச்சி பணிகள் குறித்து ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா சவால் விடுத்துள்ளார்.
2. நானும், எடியூரப்பாவும் ஜோடி எருதுகள் இல்லை: பசவராஜ் பொம்மை
நானும், எடியூரப்பாவும் ஜோடி எருதுகள் இல்லை. எடியூரப்பா எப்போதும் எங்கள் தலைவர் என பசவராஜ் பொம்மை கூறினார்.
3. ஜம்மு-காஷ்மீரை பல்லாண்டுகளுக்கு பின்னோக்கி கொண்டு சென்றுவிட்ட பா.ஜ.க.: மெகபூபா முப்தி
பா.ஜனதாவின் கொள்கைகள் ஜம்மு-காஷ்மீரை பல்லாண்டுகளுக்கு பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டதாக மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
4. பா.ஜனதாவில் நான் ஓரங்கட்டப்பட்டு விட்டேனா? - எடியூரப்பா பதில்
பா.ஜனதாவில் நான் ஓரங்கட்டுப்பட்டு விட்டேனா? என்ற கேள்விக்கு எடியூரப்பா பதிலளித்துள்ளார்.
5. இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் எடியூரப்பா பிரசாரம் - பசவராஜ் பொம்மை பேட்டி
மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதியிலும் எடியூரப்பா பிரசாரம் செய்வார் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.