தேசிய செய்திகள்

மராட்டியத்தில் மட்டும் தான் கொரோனா 3-வது அலை; மத்திய மந்திரி நாராயண் ரானே விமர்சனம் + "||" + ‘Uddhav Thackeray is instilling fear in minds of people’: Narayan Rane slams Maharashtra CM over COVID-19 handling

மராட்டியத்தில் மட்டும் தான் கொரோனா 3-வது அலை; மத்திய மந்திரி நாராயண் ரானே விமர்சனம்

மராட்டியத்தில் மட்டும் தான் கொரோனா 3-வது அலை; மத்திய மந்திரி நாராயண் ரானே விமர்சனம்
நாட்டில் வேறு எங்கும் இல்லை, மராட்டியத்தில் மட்டும் 3-வது கொரோனா அலை உள்ளது என மத்திய மந்திரி நாராயண் ரானே விமர்சித்து உள்ளார்.
நாராயண் ரானே விமர்சனம்

மத்திய மந்திரி நாராயண் ரானே கொரோனா 3-வது அலை விவகாரத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை விமர்சித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

கொரோனா 3-வது அலை மராட்டியத்தில் மட்டும் தான் உள்ளது. நாட்டின் வேறு எந்த பகுதியிலும் இல்லை. வீட்டுக்குள் இருக்க வேண்டும் என கூறி உத்தவ் தாக்கரே மக்களிடம் அச்சத்தை விதைத்து வருகிறார். அவருக்கு கைகளை கழுவது, முககவசம் அணிவது பற்றி மட்டுமே பேச தெரியும்.முதல்-மந்திரி இந்துக்களின் பண்டிகை கொண்டாட்டங்களை நிறுத்த உத்தரவிடுகிறார். அதே நேரத்தில் மற்றவர்களின் வீடுகளின் மீது கல் எறிபவர்களை பாராட்டுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த மாதம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை ஓங்கி அறைவேன் என பேசிய நாரயண் ரானேயை கண்டித்து அவரது வீடு முன் சிவசேனா இளைஞர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

விமான நிலையம் திறப்பு
இதேபோல சிந்துதுர்க் மாவட்டம் சிப்பி விமான நிலைய திறப்பு விழாவில் மத்திய விமான போக்குவரத்துறை மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா கலந்து கொள்வார் எனவும் நாராயண் ரானே கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில், "நானும், சிந்தியாவும் டெல்லியில் இருந்து மும்பை செல்வோம். அங்கிருந்து விமான நிலைய திறப்பு விழாவில் கலந்து கொள்ள சிந்துதுர்க் செல்வோம்" என்றார்.

அப்போது விழாவில் முதல்-மந்திரி கலந்து கொள்வாரா? என கேட்டபோது, "விமான சேவைக்கு அனுமதி கொடுக்கும் மத்திய மந்திரி கலந்து கொள்ளும் போது, முதல்-மந்திரியின் தேவை என்ன?. சிவசேனா தலைமையிலான அரசு கொங்கன் மண்டலத்திற்கு எதுவும் செய்யவில்லை" என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டிய மாநிலத்தில் நேற்று 2,343 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
மராட்டிய மாநிலத்தில் தற்போது 29,560 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. மராட்டியத்தில் தியேட்டர்களை திறக்க வழிகாட்டு நெறிமுறை வௌியீடு
மராட்டியத்தில் தியேட்டர்களை திறப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது.
3. மராட்டியத்தில் வழிபாட்டு தலங்கள் திறப்பு; உத்தவ் தாக்கரே சாமி தரிசனம்
மராட்டியத்தில் 6 மாதத்திற்கு பிறகு வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. மும்பா தேவி கோவிலில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
4. மராட்டியத்தில் பா.ஜனதா ஆட்சி அமைக்க மீண்டும் வாய்ப்பு கிடைக்கும்: தேவேந்திர பட்னாவிஸ்
மராட்டியத்தில் பா.ஜனதா ஆட்சி அமைக்க மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
5. மராட்டியத்தில் கல்லூரிகளுக்கான கல்வி ஆண்டு நவம்பர் 1-ந் தேதி முதல் தொடங்கும் - மந்திரி தகவல்
மராட்டியத்தில் கல்லூரிகளுக்கான கல்வி ஆண்டு நவம்பர் 1-ந் தேதி முதல் தொடங்கும் என உயர்கல்வித்துறை மந்திரி உதய் சாமந்த் தெரிவித்துள்ளார்.