தேசிய நெடுஞ்சாலையில் போர் விமானங்கள் தரையிறங்கும் வசதி


தேசிய நெடுஞ்சாலையில் போர் விமானங்கள் தரையிறங்கும் வசதி
x
தினத்தந்தி 9 Sep 2021 8:33 AM GMT (Updated: 2021-09-09T14:03:10+05:30)

ராஜஸ்தானில், தேசிய நெடுஞ்சாலையில் விமானப்படை விமானங்கள் அவசரமாக தரையிறங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூர்

ராஜஸ்தானின் பார்மரில் உள்ள காந்தவ் பகசார் பிரிவு, தேசிய நெடுஞ்சாலையில் இந்திய விமானப்படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் அவசரமாக தரையிறங்கும் வகையில் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

விமானங்கள் தரையிறங்கும் நிகழ்ச்சியை, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர். சி -130 ஜே சூப்பர் ஹெர்குலஸ் முதல் முறையாக தரையிறங்கியது.ராஜஸ்தானின் சர்வதேச எல்லையில் அமைந்துள்ள பார்மர் மற்றும் ஜாலூர் மாவட்ட கிராமங்களுக்கிடையேயான தொடர்பை இத்தகைய வசதி மேம்படுத்தும் என கூறப்படுகிறது.

மேலும், எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினருக்கு இந்த புதிய வசதி உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

Next Story