விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு: பெங்களூருவில் பஜ்ரங்க் தள அமைப்பு ஆர்ப்பாட்டம்


விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு:  பெங்களூருவில் பஜ்ரங்க் தள அமைப்பு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Sep 2021 10:05 AM GMT (Updated: 2021-09-09T15:35:35+05:30)

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கான கட்டுப்பாடுகளை எதிர்த்து பெங்களூருவில் பஜ்ரங்க் தள அமைப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெங்களூரு, 

விநாயகர் சதுர்த்தி விழா நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த விழாவை பொது இடங்களில் நடத்த பல மாநிலங்கள் தடை விதித்து வருகின்றன.  

இந்தநிலையில் கர்நாடக அரசு  4 அடி உயர சிலைகளை மட்டுமே வைக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்துள்ளது. 

இதனை எதிர்த்து பஜ்ரங்க் தள அமைப்பு  பெங்களூருவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கான கட்டுப்பாடுகளை எதிர்த்து பிபிஎம்பி அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

ஒவ்வொரு வார்டிலும் ஒரு விநாயகர் சிலை வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது  தவறு  என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்ப்பாளர் ஒருவர் கூறினார். 

Next Story