பிரிக்ஸ் உச்சி மாநாட்டை 2வது முறையாக தலைமை ஏற்று நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது - பிரதமர் மோடி


பிரிக்ஸ் உச்சி மாநாட்டை 2வது முறையாக தலைமை ஏற்று நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 9 Sep 2021 12:46 PM GMT (Updated: 9 Sep 2021 12:46 PM GMT)

பிரிக்ஸ் உச்சி மாநாட்டை 2வது முறையாக தலைமை ஏற்று நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையிலான 13வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று தொடங்கியது. இந்த 13வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை இந்தியா தலைமை தாங்குகிறது.

இந்த மாநாட்டில் பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனாரோ, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங், தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோசா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இதில் பிரதமர் மோடி பேசியதாவது:-

பிரிக்ஸ் உச்சி மாநாட்டு கூட்டத்தை 2வது முறையாக தலைமை ஏற்று நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது. பிரிக்ஸ் நாடுகள் கடந்த 15 வருடங்களில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. வளர்ந்து வரும் நாடுகளின் முன்னுரிமைகளில் கவனம் செலுத்த பிரிக்ஸ் மாநாடு பயனுள்ளதாக உள்ளது.

பிரிக்ஸ் மாநாட்டின் தலைமையின் போது இந்தியா அனைத்து உறுப்பினர்களிடமிருந்தும் முழு ஒத்துழைப்பைப் பெற்றுள்ளது. இதற்காக அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story