தேசிய செய்திகள்

தமிழக புதிய கவர்னராக ஆர்.என். ரவி நியமனம்; ஜனாதிபதி உத்தரவு + "||" + RN Ravi appointed new Governor of Tamil Nadu; Presidential order

தமிழக புதிய கவர்னராக ஆர்.என். ரவி நியமனம்; ஜனாதிபதி உத்தரவு

தமிழக புதிய கவர்னராக ஆர்.என். ரவி நியமனம்; ஜனாதிபதி உத்தரவு
தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என். ரவியை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.



சென்னை,

தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என். ரவி என்பவரை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.  இவர் நாகலாந்து கவர்னராக செயல்பட்டு வருகிறார்.

ரவீந்திர நாராயண ரவி என்ற முழு பெயரை கொண்ட அவர், பீகாரில் பிறந்தவர்.  கடந்த 1976ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியை தொடங்கிய அவர், மத்திய மற்றும் மாநில அரசு பொறுப்புகளை வகித்து ஓய்வு பெற்றவர்.

தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவி வகித்து வந்த நிலையில், அவருக்கு பஞ்சாப் கவர்னர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது.  இந்த சூழலில், பன்வாரிலால் புரோகித்துக்கு பதிலாக, தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டு உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. போதை பொருள் விவகாரம்; நடிகை அனன்யா பாண்டே நாளை ஆஜராக உத்தரவு
நடிகை அனன்யா பாண்டேவை நாளை காலை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி போதை பொருள் தடுப்பு வாரியம் உத்தரவிட்டு உள்ளது.
2. பணி நியமனம் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது: அர்ச்சகர் நியமனத்திற்கு தடை விதிக்க முடியாது ஐகோர்ட்டு உத்தரவு
புதிய பணி விதிகளின்படி நியமிக்கப்படும் அர்ச்சகர்களின் பணி நியமனம், வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும், தற்போது அர்ச்சகர் நியமனத்துக்கு இடைக்கால தடை எதுவும் விதிக்க முடியாது என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
3. வளர்ச்சிப்பணிகளை துரிதப்படுத்த மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமனம் மு.க.ஸ்டாலின் உத்தரவு
மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், இயற்கை சீற்றம், நோய்த்தொற்று உள்ளிட்ட அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ள சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக சிலரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்து உள்ளார்.
4. ஆக்கிரமிப்பில் உள்ள திரிசூலநாதர் கோவில் நிலத்தை மீட்க எடுத்த நடவடிக்கைகள் என்ன?
ஆக்கிரமிப்பில் உள்ள திரிசூலநாதர் கோவில் நிலத்தை மீட்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு.
5. ராமநாதபுரம் மாவட்டத்துக்கு புதிய கலெக்டர் தலைமைச் செயலாளர் உத்தரவு
ராமநாதபுரம் மாவட்டத்துக்கு புதிய கலெக்டர் தலைமைச் செயலாளர் உத்தரவு.