தேசிய செய்திகள்

கோவாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டுவிட்டது; முதல்-மந்திரி தகவல் + "||" + We have completed 100% first dose vaccination in the state Says Goa CM Pramod Sawant

கோவாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டுவிட்டது; முதல்-மந்திரி தகவல்

கோவாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டுவிட்டது; முதல்-மந்திரி தகவல்
கோவாவில் தகுதியுடைய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுவிட்டது என முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் தெரிவித்தார்.
பனாஜி,

கோவா யூனியன் பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் இன்று நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கோவாவில் விநாயகர் சதுர்த்தி கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இது தொடர்பாக கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவாவில் விநாயகர் சதுர்த்தி விழா கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி கொண்டாடப்படும். 

கோவாவில் தகுதியுடைய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தும் பணிகள் 100 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டது. கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தும் பணிகளை அக்டோபர் 31-ம் தேதிக்குள் நிறைவு செய்ய கோவா அரசு திட்டமிட்டுள்ளது’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. கடலூர் மாவட்டத்தில், நாளை மறுநாள் 909 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் கலெக்டர் பாலசுப்பிரமணியம் தகவல்
கடலூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் 909 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்க இருப்பதாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் தகவல் தெரிவித்தார்.
2. கொரோனா தடுப்பூசி சிறப்புமுகாம்
சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 12-ந்தேதி கொரோனா தடுப்பூசி போட சிறப்புமுகாம் நடத்தப்படும் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.
3. இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 72 கோடியை தாண்டியது
இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 72 கோடியை தாண்டியதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
4. 1,210 பேருக்கு கொரோனா தடுப்பூசி
வெம்பக்கோட்டை அருகே 1210 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
5. கொரோனா தடுப்பூசி -71 கோடியை கடந்து சாதனை
நாடு முழுவதும் இதுவரை 71.53 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.