மராட்டியத்தில் நிலச்சரிவு; கணவரால் சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண் உயிரிழப்பு


மராட்டியத்தில் நிலச்சரிவு; கணவரால் சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண் உயிரிழப்பு
x
தினத்தந்தி 9 Sep 2021 9:20 PM GMT (Updated: 2021-09-10T02:50:12+05:30)

மராட்டியத்தில் நிலச்சரிவால் வாகன போக்குவரத்து தடைப்பட்டு சிகிச்சைக்கு சென்ற பெண் உயிரிழந்து உள்ளார்.

நந்தர்பார்,

மராட்டியத்தின் நந்தர்பார் மாவட்டத்தில் சந்த்சைலி நந்தர்பார் பகுதியில் கனமழை பெய்ததில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.  இதனால், நடைபாதை ஒன்றை தவிர பிற பகுதிகளில் தடை ஏற்பட்டது.

இந்த நிலையில், மாவட்ட சப் டிவிசினல் மாஜிஸ்திரேட் மகேஷ் பாட்டீல் கூறும்போது, நிலச்சரிவு ஏற்பட்ட சூழலில், நோய் பாதிப்பு ஏற்பட்ட தனது மனைவியை கணவர் ஒருவர் சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார்.  அவர் சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் நிலச்சரிவால் சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை.  இதில், அந்த பெண் உயிரிழந்து உள்ளார் என கூறியுள்ளார்.


Next Story