ஆந்திராவில் 500க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்; தெலுங்குதேசம் குற்றச்சாட்டு


ஆந்திராவில் 500க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்; தெலுங்குதேசம் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 9 Sep 2021 9:59 PM GMT (Updated: 2021-09-10T03:29:29+05:30)

ஆந்திராவில் 500க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன என தெலுங்குதேச பொது செயலாளர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.


அமராவதி,

ஆந்திர பிரதேசத்தில் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.  இந்நிலையில், தெலுங்குதேச கட்சியின் பொது செயலாளர் நர லோகேஷ் கூறும்போது, 
ஆந்திராவில் 500க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன என குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

ஜெகன் மோகன் ஆட்சியில், திஷா சட்டத்தின் கீழ் 21 நாட்களில் தண்டனை என்ற உறுதிமொழிக்கு மாறாக நடந்து கொண்டிருக்கின்றன.  கூட்டு பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கொலை செய்யும் குற்றவாளிகள் ஜாமீனில் வெளிவந்து பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை மிரட்டி செல்கின்றனர் என கூறியுள்ளார்.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் 517 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன என அவர் கூறியுள்ளார்.


Next Story