மராட்டிய முதல்-மந்திரியை சந்தித்த இங்கிலாந்து தூதர்


மராட்டிய முதல்-மந்திரியை சந்தித்த இங்கிலாந்து தூதர்
x
தினத்தந்தி 9 Sep 2021 10:52 PM GMT (Updated: 2021-09-10T04:22:55+05:30)

இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் அலெக்ஸ் இலிஸ் மராட்டிய முதல் - மந்திரி உத்தவ் தாக்கரேவை சந்தித்தார்.

மும்பை,

மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவை இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் அலெக்ஸ் இலிஸ் நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது மராட்டிய மாநிலத்திற்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான வர்த்தகம், சுகாதாரம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இங்கிலாந்து தூதர் - மராட்டிய முதல்-மந்திரி இடையே நடைபெற்ற சந்திப்பின் போது மராட்டிய சுற்றுச்சூழல் துறை மந்திரி ஆதித்யா தாக்கரே உடன் இருந்தார். மேலும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரையும், இங்கிலாந்து தூதர் சந்தித்தார்.

இந்த சந்திப்பிற்கு பின்னர் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை பார்வையிட்ட அலெக்ஸ் இலிஸ் அங்கு வழிபாடு செய்தார். பின்னர் மும்பையின் பிரபலமான 'டாப்பாவாலா’ குழுவினரை அலெக்ஸ் சந்தித்தார்.  


Next Story