பஞ்சாபில் செப்.15-க்குள் தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு


பஞ்சாபில் செப்.15-க்குள்  தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு
x
தினத்தந்தி 10 Sep 2021 10:35 AM GMT (Updated: 10 Sep 2021 10:35 AM GMT)

செப்டம்பர் 15 -ஆம் தேதிக்குள் முதல் டோஸ் தடுப்பூசி போடாதவர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள் என்று பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.

அமிர்தரஸ், 

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான  பேராயுதமாக தடுப்பூசி கருதப்படுகிறது.  இந்தியாவில் நாள்தோறும் லட்சகணக்கானோருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் ஏறத்தாழ அனைவருக்கும்  தடுப்பூசி போட்டுவிட வேண்டும் என்ற இலக்குடன் மத்திய மாநில அரசுகள், தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விட்டுள்ளன. 

இந்த நிலையில், பஞ்சாபில் வரும் 15 ஆம் தேதிக்குள் ஒரு டோஸ் தடுப்பூசி கூட அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பஞ்சாப் முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள உத்தரவில், அரசு  ஊழியர்கள் மருத்துவ காரணங்களை தவிர்த்து, வேறு எதற்காகவும் தடுப்பூசி போடாமல் இருக்கக் கூடாது. மீறி தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பட்சத்தில்,  கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story