உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்: கட்சியினருடன் பிரியங்கா காந்தி ஆலோசனை


உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்: கட்சியினருடன் பிரியங்கா காந்தி ஆலோசனை
x
தினத்தந்தி 10 Sep 2021 10:50 AM GMT (Updated: 2021-09-10T16:20:50+05:30)

உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை நடைபெற்றது.

லக்னோ

உத்தரப் பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கு அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை சந்திக்க அனைத்துக் கட்சிகளும் வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

இந்நிலையில், லக்னோவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் தேர்தலை எதிர்கொள்வது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது.

வருகின்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.கவை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்ற பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன.

பிரியங்கா காந்தி அங்கு 3 நாட்கள் தங்கி இருந்து தேர்தலுக்கான ஆயத்த பணிகளை மேற்கொள்வார் என கூறப்படுகிறது.

Next Story