கொரோனாவை ஒழிக்க சிவப்பு எறும்பு சட்னி...! மனுவை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்


கொரோனாவை ஒழிக்க சிவப்பு எறும்பு சட்னி...! மனுவை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்
x
தினத்தந்தி 10 Sep 2021 11:55 AM GMT (Updated: 2021-09-10T17:25:17+05:30)

கொரோனாவை ஒழிக்க நாட்டிலுள்ள அனைவருக்கும் சிவப்பு எறும்பு சட்னி கொடுக்க உத்தர செய்ய முடியாது, அனைவரும் தடுப்பூசி எடுத்து கொள்ளுங்கள் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி

கொரோனா பரவல் நாடு முழுவதிலும் தற்பொழுதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் கொரோனாவை ஒழிக்கும் விதமாக நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒடிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கக்கூடிய பழங்குடியினர் சிவப்பு எறும்பு சட்னியை விருப்ப உணவாக சாப்பிட வருகின்றனர். இந்த சிவப்பு எறும்புகள் உடன் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து அதைத் தேங்காய் சட்னி போல பயன்படுத்துகிறனர்.

அண்மையில், ஒடிசாவை சேர்ந்த என்ஜினியர் ஒருவர் இது தொடர்பாக அம்மாநில ஐகோர்ட்டில்  பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்தார். அதில் சிவப்பு எறும்பு சட்னியில் இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம் ஆகியவை அதிகமாக இருப்பதாகவும், இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், கொரோனாவுக்கு மருந்தாக இதனை பரிந்துரைக்க வேண்டும் எனவும் அவர் தனது கோரிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு சிப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டது.

இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்  நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட் விக்ரம் நாத் மற்றும் ஹிமா கோலி ஆகியோர் கொண்ட  அமர்வு  பாரம்பரியமாக கொரோனாவை ஒழிப்பதற்கான மருந்துகள் நிறைய உள்ளது.  இவற்றையெல்லாம் கொரோனாவிற்கு மருந்தாக பயன்படுத்த முடியாது.

இந்த எறும்பு சட்னியை நீங்கள் உங்கள் சொந்த பயன்பாட்டுக்காக வைத்திருக்கலாம். ஆனால் நாடு முழுவதும் உள்ள அனைவருக்கும் இந்த எறும்பு சட்னியை நாங்கள் கொடுக்க உத்தரவிட முடியாது.

மேலும் ஒடிசா பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இந்த மனுதாரர் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என கூறி,சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

Next Story