இந்திய எல்லைக்குள் ஆளில்லா விமானம் வழியே கடத்த முயன்ற போதை பொருள் பறிமுதல்


இந்திய எல்லைக்குள் ஆளில்லா விமானம் வழியே கடத்த முயன்ற போதை பொருள் பறிமுதல்
x
தினத்தந்தி 10 Sep 2021 5:43 PM GMT (Updated: 2021-09-10T23:13:33+05:30)

இந்திய எல்லைக்குள் ஆளில்லா விமானம் வழியே கடத்த முயன்ற போதை பொருளை பி.எஸ்.எப். படையினர் பறிமுதல் செய்தனர்.


லூதியானா,

இந்தியாவின் பஞ்சாப்பில் அமிர்தசரஸ் நகரில், பாகிஸ்தான் எல்லை பகுதியில் இருந்து ஆளில்லா விமானம் ஒன்று ஊடுருவியுள்ளது.  இதனை, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்பு படையினர் (பி.எஸ்.எப்.) கண்டறிந்து அதனை சுட்டு வீழ்த்தினர்.

இதன்பின்பு அதில் சோதனை செய்ததில், ஹெராயின் என்ற ஒரு வகை போதை பொருளை கடத்தியிருந்தது தெரிய வந்தது.  அவற்றின் எடை 6 கிலோ இருந்தது.  அவற்றை பி.எஸ்.எப். படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.


Next Story