புதுச்சேரியில் 111 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


புதுச்சேரியில் 111 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 11 Sep 2021 12:39 AM GMT (Updated: 2021-09-11T06:09:24+05:30)

புதுச்சேரியில் 111 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.புதுச்சேரி,


புதுச்சேரியில் 5,847 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், 111 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால் மொத்த பாதிப்பு 1,24,629 ஆக உயர்ந்துள்ளது.  178 பேர் மருத்துவமனையிலும், 817 பேர் லேசான அறிகுறியுடன் வீட்டு தனிமையிலும் உள்ளனர்.

109 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் புதுச்சேரியில் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 1,21,814 ஆக உள்ளது.  கொரோனா உயிரிழப்பு பதிவாகவில்லை.  இதுவரை மொத்தம் 1,820 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தொற்று பரவல் சதவீதம் 1.90 ஆகவும், குணமடைந்தோர் சதவீதம் 97.74 ஆகவும், உயிரிழப்பு சதவீதம் 1.46 ஆகவும் உள்ளது.  935 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.  புதுச்சேரியில் 2வது டோஸ் உட்பட இதுவரை 8.52 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.


Next Story