வாயில் மறைத்து ஒரு கிலோ தங்கம் கடத்தல்


வாயில் மறைத்து ஒரு கிலோ தங்கம் கடத்தல்
x
தினத்தந்தி 11 Sep 2021 6:25 AM GMT (Updated: 2021-09-11T11:55:27+05:30)

வாயினுள் மறைத்து கடத்தப்பட்ட 951 கிராம் தங்க பற்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுடெல்லி

டெல்லி விமான நிலையத்திற்கு வாயில் மறைத்து வைத்து எடுத்து வரப்பட்ட 951 கிராம் தங்கப்பற்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த உஸ்பெகிஸ்தானை சேர்ந்த இருவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

அதில் வாயினுள் பற்களை போன்று தங்கம் மற்றும் உலோக செயினை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் கடத்திவரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

Next Story