பாரதியாரின் எண்ணங்கள் பல தலைமுறைகளுக்கு நமக்கு ஊக்கமளிக்கும் - அமித்ஷா தமிழில் டுவீட்


பாரதியாரின் எண்ணங்கள் பல தலைமுறைகளுக்கு நமக்கு ஊக்கமளிக்கும் - அமித்ஷா தமிழில் டுவீட்
x
தினத்தந்தி 11 Sep 2021 9:09 AM GMT (Updated: 2021-09-11T14:39:51+05:30)

புகழ்பெற்ற இந்திய கவிஞர், எழுத்தாளர் & சுதந்திர போராட்டவீரர் மகாகவி பாரதியாரின் 100-வது நினைவு தினத்தில் நான் அவரை வணங்குகிறேன் என மத்திய உள்துறை மந்திரி அமிஷா கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் மகாகவி பாரதியாரின் 100-வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ஆம் தேதி மகாகவி நாளாக அரசு சார்பில் கொண்டாடப்படும் என அறிவித்திருந்தார்.

இதனையடுத்து பாரதியின் 100-வது ஆண்டு நினைவு நாளான இன்று, பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் பலரும், பாரதியார் குறித்த கருத்துக்களை தங்களது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது டுவிட்டர் பதிவில், 'புகழ்பெற்ற இந்திய கவிஞர், எழுத்தாளர் & சுதந்திர போராட்ட வீரர் மகாகவி பாரதியாரின் 100-வது நினைவு தினத்தில் நான் அவரை வணங்குகிறேன்! பாரதியாரின் பாடல்களால் ஈர்க்கப்பட்டு எண்ணற்ற மக்கள் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவருடைய எண்ணங்கள் பல தலைமுறைகளுக்கு நமக்கு ஊக்கமளிக்கும்.' என பதிவிட்டுள்ளார்.

Next Story