குஜராத் முதல்-மந்திரி விஜய் ரூபானி திடீர் ராஜினாமா


குஜராத் முதல்-மந்திரி விஜய் ரூபானி திடீர் ராஜினாமா
x
தினத்தந்தி 11 Sep 2021 9:57 AM GMT (Updated: 11 Sep 2021 9:57 AM GMT)

குஜராத் மாநில முதல்-மந்திரி விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அகமதாபாத்,

மாநில தலைநகரின் புறநகரில் உள்ள ரபாரி சமூகத்தின் (கால்நடை வளர்ப்பைத் தொழிலாகக் கொண்ட வர்கள்) உறுப்பினர்களுக்காக அமைக்கப்படும் பயிற்சி மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில்  கலந்து கொண்டு முதல் ரூபானி பங்கேற்றார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கால்நடை வளர்ப்பைத் தொழிலாகக் கொண்ட ரபாரி சமூகத்தினரின் கூட்டத்தில் பேசிய விஜய் ரூபானி;-

பசுக்களைக் காக்கவும், நிலப்பறிப்பு, சங்கிலிப் பறிப்பில் ஈடுபடுவோரைத் தண்டிக்கவும் சட்டங்கள் உள்ளன. இந்துப் பெண்களைக் காதல் வலையில் வீழ்த்துவதைத் தடுக்க ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது. அதைக் கடுமையாக நடைமுறைப்படுத்தப் போவதாகவும் தெரிவித்த நிலையில், தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.  அடுத்த ஆண்டு இறுதியில் குஜராத் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விஜய் ரூபானி ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. அகமதாபாத்தில் கவர்னர் மாளிகை சென்ற அவர் கவர்னரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். 

பாஜக கட்சியை சேர்ந்ஹ்ட விஜய் ரூபானி, ஆனந்தி பென் படேலுக்கு பிறகு முதல்-மந்திரியானார்.  பாஜகவை சேர்ந்த 65 வயதான விஜய் ரூபானி 2016 முதல் குஜராத் முதல்-மந்திரியாக இருந்து வந்தார். 

Next Story