குஜராத்: முதல்-மந்திரி தேர்வு குறித்து பாஜக எம்எல்ஏ-க்கள் ஆலோசனை

குஜராத்: முதல்-மந்திரி தேர்வு குறித்து பாஜக எம்எல்ஏ-க்கள் ஆலோசனை
x
தினத்தந்தி 11 Sep 2021 3:45 PM GMT (Updated: 2021-09-11T21:15:36+05:30)

குஜராத் முதல்-மந்திரி விஜய் ரூபானி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பாஜக மூத்த தலைவர்கள் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.

அகமதாபாத்,

குஜராத் முதல்-மந்திரி விஜய் ரூபானி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பாஜக மூத்த தலைவர்கள் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.

இந்தக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, துணை முதல்-மந்திரி நிதின் படேல், மாநில பாஜக தலைவர் சிஆர் பாட்டில் மற்றும் ரூபானி ஆகியோர் பங்கேற்றனர்.

இதுபற்றி  பாஜக வட்டாரங்கள் தெரிவித்தது:

"எம்எல்ஏ-க்கள் அனைவரும் இரவுக்குள் காந்திநகர் வர உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த முதல்-மந்திரி யார் என்பது குறித்த முடிவு எம்எல்ஏ-க்களுடனான கூட்டத்துக்குப் பிறகு நாளை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story