ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,145 பேருக்கு கொரோனா தொற்று


ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,145 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 11 Sep 2021 4:26 PM GMT (Updated: 2021-09-11T21:56:38+05:30)

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,145 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அமராவதி, 

ஆந்திர மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆந்திராவில் ஒரு நாளில் மட்டும் புதிதாக 1,145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,28,795ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 17 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,987ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,090 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக 19,99,651 அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 15,157 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story