தேசிய செய்திகள்

ஆந்திர பிரதேசத்தில் லாரியில் கடத்தப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் + "||" + Rs 2 crore worth of cannabis seized in a lorry in Andhra Pradesh

ஆந்திர பிரதேசத்தில் லாரியில் கடத்தப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

ஆந்திர பிரதேசத்தில் லாரியில் கடத்தப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
ஆந்திர பிரதேசத்தில் லாரியில் கடத்தப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கிழக்கு கோதாவரி,

ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரில் இருந்து உத்தர பிரதேசம் நோக்கி லாரி ஒன்று சென்றுள்ளது.  அதில், போதை பொருள் கடத்தப்படுகிறது என போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.

ராமவரம் கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற அந்த லாரியை ஜக்கம்பேட்டை ஆய்வாளர் சுரேஷ் தலைமையிலான போலீசார் படை தடுத்து நிறுத்தி சோதனையிட்டு உள்ளது.

இதில், 2 ஆயிரம் கிலோ எடை கொண்ட லாரியில் கடத்தப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.  இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுதவிர, 2.31 லட்சம் பணம் மற்றும் 7 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.  இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பெங்களூருவில் ரூ.10 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்- 2 பேர் கைது
பெங்களூருவில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய முயன்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக கேரளா, மணிப்பூரை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. பெங்களூருவில் தள்ளுவண்டி வியாபாரிகளிடம் இருந்து ஒலி பெருக்கிகள் பறிமுதல்
பெங்களூருவில் அதிக சத்தம் எழுப்பும் ஒலி பெருக்கியால் மாணவர்கள், முதியவர்களுக்கு தொல்லை ஏற்பட்டதால், நடைபாதை வியாபாரிகளிடம் இருந்து ஒலி பெருக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு்ள்ளது.
3. சென்னை விமான நிலையத்தில் 8 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல்
சென்னை விமான நிலைய சரக்கக பிரிவில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்த முயன்ற 7,990 போதை மாத்திரைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
4. துபாயில் இருந்து சென்னைக்கு சார்ஜரில் மறைத்து கடத்தி வந்த ரூ.58 லட்சம் தங்கம் பறிமுதல்
துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு லேப்டாப் சார்ஜரில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.58 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
5. துபாயில் இருந்து சென்னைக்கு சார்ஜரில் மறைத்து கடத்தி வந்த ரூ.58 லட்சம் தங்கம் பறிமுதல்
துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு லேப்டாப் சார்ஜரில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.58 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.