50 சதவீதத்துக்கும் மேற்பட்ட இந்திய விவசாய குடும்பங்கள் கடனில் தத்தளிப்பு; ஆய்வில் தகவல்


50 சதவீதத்துக்கும் மேற்பட்ட இந்திய விவசாய குடும்பங்கள் கடனில் தத்தளிப்பு; ஆய்வில் தகவல்
x
தினத்தந்தி 11 Sep 2021 6:32 PM GMT (Updated: 2021-09-12T00:02:32+05:30)

இந்திய விவசாயிகளின் குடும்ப சூழல், வருமானம், கடன் உள்ளிட்டவை தொடர்பாக தேசிய புள்ளியியல் அலுவலகம் ஆய்வு செய்தது. 2019-ம் ஆண்டுக்கான இந்த ஆய்வு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன.

அந்தவகையில் நாட்டின் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட விவசாய குடும்பங்கள் கடனில் தத்தளிப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. சராசரியாக குடும்பம் ஒன்றுக்கு ரூ.74,121 கடன் இருப்பது தெரியவந்துள்ளது.இந்த கடனில் 57.5 சதவீதம் மட்டுமே விவசாயத்துக்காக வாங்கப்பட்டது ஆகும். இதைப் போல 69.6 சதவீத கடன்கள்தான் வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் போன்ற அரசு நிறுவனங்களிடம் வாங்கப்பட்டு உள்ளன. 20.5 சதவீத கடன் உள்ளூர் வட்டிக்காரர் களிடம் பெறப்பட்டு இருக்கின்றன.

2019-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 9.3 கோடி விவசாய குடும்பங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டு இருக்கிறது. இதில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 45.8 சதவீதமும், எஸ்.சி. பிரிவினர் 15.9 சதவீதமும், எஸ்.டி. பிரிவினர் 14.2 சதவீதமும், பிற பிரிவினர் 24.1 சதவீதமும் ஆகும்.

2018-19 வேளாண் ஆண்டில் விவசாயிகளின் வருமானம் சராசரியாக ரூ.10,218 ஆகும்.

Next Story