21 பேரை பலிகொண்ட கோழிக்கோடு விமான விபத்துக்கான காரணம் என்ன? - வெளியான அதிர்ச்சி தகவல்


21 பேரை பலிகொண்ட கோழிக்கோடு விமான விபத்துக்கான காரணம் என்ன? - வெளியான அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 11 Sep 2021 7:12 PM GMT (Updated: 2021-09-13T06:02:33+05:30)

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர்.

திருவனந்தபுரம்,

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. 190 பயணிகளுடன் வந்த அந்த விமானம் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது விபத்துக்குள்ளானது. 

விமானம் ஓடுதளத்தை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்தவர்களில் 2 விமானிகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர்.

இதற்கிடையில், இந்த விபத்துக்கான காரணம் குறித்து 'விமான விபத்துக்கான விசாரணை அமைப்பு’ விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில், கோழிக்கோடு விமான விபத்து குறித்து ‘விமான விபத்துக்கான விசாரணை அமைப்பு’ நடத்திய விசாரணை முடிவுக்கு வந்து அந்த விசாரணை அறிக்கை நேற்று வெளியானது. அந்த விசாரணை அறிக்கையில் இந்த விபத்துக்கான காரணம் தெரியவந்துள்ளது.

அந்த அறிக்கையின் தகவலின்படி, விமானத்தை தரையிறக்கும் போது நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை விமானி பின்பற்றாததே கோழிக்கோடு விமான விபத்து ஏற்பட காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், தொழில்நுட்ப கோளாறும் இந்த விபத்து ஏற்பட ஒரு காரணியாக இருக்கலாம் என்பதை புறக்கணித்துவிட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரையிறக்கத்தின் போது நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை விமானி பின்பற்றாததே இந்த விபத்து ஏற்பட காரணமாக இருக்கலாம்.  

விமானி விமானத்தை தரையிறக்கும்போது நிலைத்தன்மையற்ற அனுகுமுறைகளை தொடர்ந்து பின்பற்றியுள்ளார். மேலும், விமான கண்காணிப்பு தொழில்நுட்பம் விமானத்தை தரையிறக்குவதற்கு மேலும் ஒரு முயற்சி எடுக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும், விமான கண்காணிப்பு தொழில்நுட்பம் விமான இயக்கத்தை தனது கட்டுப்பாட்டில் எடுக்காமல் தோல்வியடைந்ததும், விமானி விமானத்தை தரையிறக்க ஒதுக்கப்பட்ட பகுதியை தாண்டி ஒடுதளத்தின் பாதி தூரத்தில் தரையிறக்கியுள்ளார்’ இதுவே இந்த விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story