தேசிய செய்திகள்

மராட்டியம்: உத்தவ் தாக்கரே உடன் சரத் பவார் சந்திப்பு + "||" + NCP chief Sharad Pawar visited Maharashtra CM Uddhav Thackerays official residence

மராட்டியம்: உத்தவ் தாக்கரே உடன் சரத் பவார் சந்திப்பு

மராட்டியம்: உத்தவ் தாக்கரே உடன் சரத் பவார் சந்திப்பு
மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சந்தித்தார்.
மும்பை,

மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேற்று சந்தித்தார். உத்தவ் தாக்கரேவின் வீட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது சரத் பவாரின் மனைவி, மகளும் எம்.பி.யுமான சுப்ரியா சுலே, அவரது கணவர் மற்றும் உத்தவ் தாக்கரேவின் மனைவி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின் போது உத்தவ் தாக்கரேவின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைக்கு வழிபாடு செய்தனர். 

மராட்டியத்தில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியின் தலைமையாக சிவசேனா உள்ளது. அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே மராட்டிய முதல்-மந்திரியாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. பெண்கள் மீது தாக்குதல் நடத்த கை ஓங்கும் ஆணின் கைகள் உடைக்கப்படும் - பெண் எம்.பி. அதிரடி பேச்சு
பெண்கள் மீது தாக்குதல் நடத்த கை ஓங்கும் ஆணின் கைகள் உடைக்கப்படும் என்று பெண் எம்.பி. தெரிவித்துள்ளார்.
2. மராட்டியம்: பயங்கர ஆயுதங்களுடன் மக்களை அச்சுறுத்திய 5 பேர் கைது
மராட்டியத்தில் பயங்கர ஆயுதங்களுடன் மக்களை மிரட்டி வந்த ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டனர்.
3. மராட்டியம்: ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு - 6 பேர் படுகாயம்
மராட்டியத்தில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்ததுடன், 6 பேர் படுகாயமடைந்தனர்.
4. மண்டபத்திற்கு 5 மணி நேரம் தாமதம்: மணமகனின் நடன மோகத்தால் நின்ற திருமணம்..!!
மணமகன் தாமதமாக வந்ததால், ஆத்திரமடைந்த மணப்பெண்ணின் தந்தை திருமணத்தை நிறுத்திய சம்பவம் மராட்டியத்தில் நடந்து உள்ளது.
5. தொற்று அதிகரித்தால், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும்: மராட்டிய சுகாதார மந்திரி
தொற்று அதிகரித்தால், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என்று மராட்டிய சுகாதார மந்திரி கூறியுள்ளார்.