நிதி நிறுவன ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி 12 கிலோ தங்கம் கொள்ளை


நிதி நிறுவன ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி 12 கிலோ தங்கம் கொள்ளை
x
தினத்தந்தி 11 Sep 2021 9:27 PM GMT (Updated: 2021-09-12T02:57:35+05:30)

மேற்குவங்காளத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி 12 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலம் பசிம் பிரெட்ஹமன் மாவட்டம் அசன்சூல் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நேற்று வழக்கம் போல ஊழியர்கள் தங்கள் பணிகளை செய்துகொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் நிதி நிறுவன ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டியது. மேலும், நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த 12 கிலோ தங்கத்தையும், 3 லட்ச ரூபாய் பணத்தையும் அந்த கும்பல் கொள்ளையடித்து தப்பிச்சென்றது. 

கொள்ளைபோன தங்கத்தின் மதிப்பு 8 கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கொள்ளைச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். 

Next Story