தேசிய செய்திகள்

ரெயில் பெட்டிகளை தனியாருக்கு விற்பனை செய்யவும், குத்தகைக்கு விடவும் இந்திய ரெயில்வே திட்டம் + "||" + Indian Railways Plans to Lease, Sell Train Coaches to Private Parties

ரெயில் பெட்டிகளை தனியாருக்கு விற்பனை செய்யவும், குத்தகைக்கு விடவும் இந்திய ரெயில்வே திட்டம்

ரெயில் பெட்டிகளை தனியாருக்கு விற்பனை செய்யவும், குத்தகைக்கு விடவும் இந்திய ரெயில்வே திட்டம்
ரெயில் பெட்டிகளை தனியாருக்கு விற்பனை செய்யவும், குத்தகைக்கு விடவும் ரெயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
புதுடெல்லி, 

சுற்றுலாவின் பெயரால் ரெயில் பெட்டிகளை குத்தகைக்கு விடவும், விற்கவும் திட்டமிட்டு, அதற்கான கொள்கை வகுக்கப்படுகிறது.

நமது நாட்டில் தனியார் துறையினரும் ரெயில்களை இயக்க ரெயில்வே துறை விரும்புகிறது. ஆனால் இதற்கு இந்திய பெருநிறுவனங்களிடம் மிகக்குறைந்த அளவுக்கே ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்த அடியை எடுத்து வைக்க ரெயில்வே விரும்புகிறது.

அதாவது, கலாசாரம், மதம் மற்றும் இன்ன பிற சுற்றுலா வகைக்கு ரெயில்களை தனியார் துறையினர் இயக்க ரெயில்வே துறை அதிரடியாக திட்டமிட்டுள்ளது.

இதற்காக தனியார் துறையினருக்கு ரெயில் பெட்டிகளை குத்தகைக்கு விடவும், விற்பனை செய்யவும் பரிசீலிக்கப்படுகிறது.

இதுதொடர்பான கொள்கையையும், திட்டத்தின் விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் முடிவு செய்வதற்கு செயல் இயக்குனர் அளவிலான உயர்மட்டக்குழுவை ரெயில்வே அமைத்துள்ளது. இதை ரெயில்வே அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின்கீழ் செயல்பட விருப்பம் உள்ளவர்கள் குறைந்தபட்சம் 16 ரெயில்பெட்டிகளை வாங்கவோ, குத்தகைக்கு எடுக்கவோ வேண்டும் என்று கூறப்படும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரெயில் பெட்டிகளை குத்தகைக்கு அல்லது விலைக்கு வாங்குகிறவர்கள் பயண வழிகள், பயணத்திட்டம், கட்டணம் போன்றவற்றை நிர்ணயித்துக்கொள்ள அனுமதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. இரண்டு ஆண்டுகளில் விபத்தால் உயிரிழப்பு ஏற்படவில்லை: மாநிலங்களவையில் தகவல்
கடந்த இரண்டு ஆண்டுகளில், விபத்தில் சிக்கி எந்த பயணியும் உயிரிழக்கவில்லை என இந்தியன் ரயில்வே தகவல் வெளியிட்டுள்ளது.
2. நாள்தோறும் ஆயிரம் ரெயில்வே ஊழியர்கள் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிப்பு
நாள்தோறும் ஆயிரம் ரெயில்வே ஊழியர்கள் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிப்படைவதாக இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.
3. ரெயில்வே இந்திய மக்களின் சொத்து; அது தனியார்மயமாக்கப்படாது - ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல்
இந்திய ரெயில்வே இந்திய மக்களின் சொத்து; அது தனியார்மயமாக்கப்படாது என்று ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.