நாடு முழுவதும் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி 73 கோடி


நாடு முழுவதும் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி 73 கோடி
x
தினத்தந்தி 12 Sep 2021 12:04 AM GMT (Updated: 12 Sep 2021 12:04 AM GMT)

நாடு முழுவதும் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 73 கோடியை கடந்து உள்ளது.


புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 65,27,175 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதனால், நேற்று காலை 7 மணி வரையில் மொத்தம் 74,70,363 முகாம்களில் 73,05,89,688 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 32,198 பேர் குணமடைந்து உள்ளனா். இதன் மூலம் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 3,23,74,497 ஆக உயா்ந்துள்ளது.  தொடா்ந்து 76 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் நேற்று வரையில் 72.01 கோடிக்கும் கூடுதலான (72,01,73,325) கொரோனா தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

5.75 கோடி (5,75,43,795) கொரோனா தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியாா் மருத்துவமனைகள் வசம் உள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Next Story