தேசிய செய்திகள்

குஜராத்தின் அடுத்த முதல் மந்திரி யார்? பாஜக மூத்த தலைவர்கள் இன்று ஆலோசனை + "||" + Day After Vijay Rupani Exit, Top BJP Leaders Meet In Gujarat

குஜராத்தின் அடுத்த முதல் மந்திரி யார்? பாஜக மூத்த தலைவர்கள் இன்று ஆலோசனை

குஜராத்தின் அடுத்த முதல் மந்திரி யார்? பாஜக மூத்த தலைவர்கள் இன்று ஆலோசனை
குஜராத் முதல் மந்திரியாக இருந்து வந்த விஜய் ரூபானி நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அகமதாபாத்

குஜராத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக  விஜய் ரூபானி இருந்து வந்தார். இந்த நிலையில், நேற்று திடீரென தனது பதவியை விஜய் ரூபானி ராஜினாமா செய்தார். கட்சியில் அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற பாஜகவின் கொள்கையின்படி பதவி விலகியதாக கூறினார். 

பாஜக ஆட்சிக்காலம் முடிவடைய இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், அவர் பதவி விலகியதால் புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான பணிகளை பாஜக தலைமை தொடங்கி உள்ளது. அடுத்த முதலமைச்சருக்கான போட்டியில், குஜராத்தைச் சேர்ந்த இரண்டு மத்திய மந்திரிகள், துணை முதலமைச்சர் நிதின் பட்டேல், லட்சத்தீவு யூனியன் பிரதேச அதிகாரி பிரபுல் கோடா படேல் ஆகியோர் இருப்பதாகக் கூறப்படுகிறது.  முதல்வரை தேர்வு செய்வதற்கு, கட்சியின் மத்திய பார்வையாளர்களாக மத்திய மந்திரிகள் பிரல்ஹாத் ஜோஷி, நரேந்திர சிங் தோமர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், மத்திய மந்திரி தோமர், கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் தருண் சக்  ஆகியோர் இன்று காலை அகமதாபாத் வந்தனர்.  அங்கிருந்து மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் வீட்டிற்கு சென்று அவரிடம் ஆலோசனை மேற்கொண்டனர். முதல்வரை தேர்வு செய்வதற்காக, இன்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதனால், குஜராத்தின் புதிய முதல் மந்திரியாக யார் ? தேர்வு செய்யப்படுவார்கள் என்பது விரைவில் தெரிந்து விடும். 


தொடர்புடைய செய்திகள்

1. பாபுல் சுப்ரியோ தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்
மத்திய மந்திரி பொறுப்பு பறிக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த பாபுல் சுப்ரியோ, பாஜகவில் இருந்து விலகி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
2. நவராத்திரி கொண்டாட்டம்: கொரோனா கவச உடை அணிந்து நடனமாடிய பெண்கள்
குஜராத் மாநிலத்தில் நவராத்திரி கொண்டாட்டத்தில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொரோனா கவச உடை அணிந்து இளம் பெண்கள் நடனமாடினர்.
3. உத்தர பிரதேசத்தில் அமைதியை சீர்குலைக்க ராகுல் காந்தி முயற்சி: பாஜக குற்றச்சாட்டு
லகிம்பூர் வன்முறை தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பாஜக விளக்கம் அளித்துள்ளது.
4. குஜராத்தில் நகராட்சி தேர்தல்: பா.ஜனதா அமோக வெற்றி - வாக்காளர்களுக்கு மோடி நன்றி
குஜராத்தில் நகராட்சி தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றிபெற்றதற்கு வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
5. குஜராத்: காந்திநகர் மாநகராட்சி தேர்தல் - பிரதமர் மோடியின் தாயார் வாக்களித்தார்!
காந்திநகர் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.