கொரோனா அச்சுறுத்தல்; சிக்கிமில் பள்ளிகள் திறக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் மீண்டும் மூடப்பட்டது


கொரோனா அச்சுறுத்தல்; சிக்கிமில் பள்ளிகள் திறக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் மீண்டும் மூடப்பட்டது
x
தினத்தந்தி 12 Sep 2021 6:31 AM GMT (Updated: 12 Sep 2021 6:31 AM GMT)

மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் கடந்த 6-ஆம் தேதி திறக்கப்பட்டன.


சிக்கிம் மாநிலத்தில் மாணவா்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, திறந்த ஒரே வாரத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளையும் மாநில அரசு மூடுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து அம்மாநில அரசு கூறியிருப்பதாவது;-

மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் கடந்த 6-ஆம் தேதி திறக்கப்பட்டன. 9-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகள் நடைபெற்றன. இதற்கிடையே, 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் 5 மாணவா்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. 

பள்ளிகளைத் தொடா்ந்து நடத்தினால், கொரோனா தொற்று மேலும் பரவும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மாணவா் நலனில் அலட்சியம் காட்ட விரும்பவில்லை. எனவே, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளை வரும் அக்டோபா் 31-ஆம் தேதி வரை மூடுவதற்கு முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story