தேசிய செய்திகள்

நந்திகிராம் தொகுதியை போல பவானிப்பூரில் மம்தா பானர்ஜி தோல்வி அடைய வாய்ப்பு; பாஜக + "||" + Mamata Banerjee may lose from Bhabanipur just like Nandigram, claims Dilip Ghosh

நந்திகிராம் தொகுதியை போல பவானிப்பூரில் மம்தா பானர்ஜி தோல்வி அடைய வாய்ப்பு; பாஜக

நந்திகிராம் தொகுதியை போல பவானிப்பூரில் மம்தா பானர்ஜி தோல்வி அடைய வாய்ப்பு; பாஜக
மேற்கு வங்காள மாநிலம் பவானிபூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார்.
கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் பவானிபூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்த மம்தா, இந்த தொகுதியில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

மம்தாவை எதிர்த்து, பாஜக சார்பில் வழக்கறிஞர் பிரியங்கா திப்ரேவால் களமிறக்கப்பட்டுள்ளார்.  மம்தா பானர்ஜிக்கு இந்த தேர்தலில் கடும் சவால் அளிக்கும் வகையில், பாஜக சார்பில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் அடங்கிய தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பவானிபூர் தொகுதியில் பாஜக தேர்தல் பிரசாரத்தை தொடங்கியது. கட்யின் மாநில  தலைவர் திலிப் கோஷ், வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால் ஆகியோர், சுவரில் பாஜகவின் சின்னமான தாமரையை வரைந்தனர்

அப்போது பேசிய திலிப் கோஷ், “மம்தா பானர்ஜி நந்திகிராமில் வெற்றி பெற முடியும் என்ற எண்ணத்தில் போட்டியிட்டார். ஆனால் அவர் தோல்வி அடைந்தார். அரசியலில் என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. தேர்தலுக்கு பிந்தைய வன்முறைக்கு எதிரான போராட்டத்தை பிரியங்கா திப்ரேவால் வழிநடத்தினார். நந்திகிராம் தொகுதியை போல பவானிப்பூரிலும் மம்தா பானர்ஜி தோல்வி அடைய வாய்ப்புள்ளது. மம்தா பானர்ஜியும் இதை அறிந்து வைத்திருக்கிறார்’ என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. 2024ம் ஆண்டு மம்தா பிரதமராவார், மம்தாவின் மருமகன் மே.வங்க முதல் மந்திரியாவார் - திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி!
மேற்குவங்காளத்தின் தற்போதைய முதல் மந்திரியான மம்தா பானர்ஜி 2024ம் ஆண்டு பிரதமராக பதவியேற்பார்
2. மக்கள் கவலைப்படும் வகையில் எனது ஆட்சி அமையாது - ரமலான் தொழுகை கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேச்சு
பானர்ஜி அங்கு கூடியிருந்த மக்களை பார்த்து பயப்பட வேண்டாம், ஆனால் ஒரு சிறந்த எதிர்காலத்திற்காக ஒன்றுபடுமாறு கேட்டுக் கொண்டார்.
3. "இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழியா? மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும் - மம்தா பானர்ஜி
இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழியா என்பது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும் என மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
4. ஒற்றுமையே நமது பலம் - மம்தா பானர்ஜி
'நாங்கள் மக்களை ஒன்றிணைக்கவே விரும்புகிறோம்' என்றும், 'ஒற்றுமையே நமது முக்கிய பலம்' என மேற்குவங்க முதல்-மந்திரி மம்தாபானர்ஜி தெரிவித்துள்ளார்.
5. 2024 நாடாளுமன்ற தேர்தலில் மம்தா மாற்றத்தை உருவாக்குவார் - சத்ருகன் சின்கா பேட்டி
2024 நாடாளுமன்ற தேர்தலில் மம்தா மாற்றத்தை உருவாக்குவார் என்று சத்ருகன் சின்கா கூறியுள்ளார்.