தேசிய செய்திகள்

திருவனந்தபுரம் எக்ஸ்பிரசில் மயக்க மருந்து கொடுத்து 3 பெண் பயணிகளிடம் கொள்ளை + "||" + 3 female passengers robbed of sedatives on Thiruvananthapuram Express

திருவனந்தபுரம் எக்ஸ்பிரசில் மயக்க மருந்து கொடுத்து 3 பெண் பயணிகளிடம் கொள்ளை

திருவனந்தபுரம் எக்ஸ்பிரசில் மயக்க மருந்து கொடுத்து 3 பெண் பயணிகளிடம் கொள்ளை
டெல்லியிலிருந்து திருவனந்தபுரம் சென்ற நிஜாமுதின் எக்ஸ்பிரசில் மயக்க மருந்து கொடுத்து 3 பெண் பயணிகளிடம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது.திருவனந்தபுரம்,

டெல்லியில் இருந்து சென்னை வழியாக திருவனந்தபுரம் சென்ற நிஜாமுதின் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மயக்க மருந்து கொடுத்து 3 பெண்களிடம் தங்க நகைகள், மொபைல் போன் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

அவர்களில் விஜயலட்சுமி மற்றும் அஞ்சலி ஆகிய இரு பெண்களும் தாய் மற்றும் மகள் ஆவர்.  ஆக்ராவில் இருந்து கேரளாவுக்கு பயணம் செய்துள்ளனர்.  தமிழகத்தின் சேலம் நகரில் இருந்து ஆலுவா நோக்கி சென்ற கவுசல்யா என்ற மற்றொரு பெண்ணும் கொள்ளை சம்பவத்தில் பாதிக்கப்பட்டு உள்ளார்.

திருவனந்தபுரம் ரெயில் நிலையத்திற்கு மயங்கிய நிலையில் வந்து சேர்ந்த 3 பெண்களையும் ரெயில்வே போலீசார் மீட்டனர்.  இதன்பின் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. உளுந்தூர்பேட்டை அருகே கள்ளக்காதலன் வீட்டில் பெண் மர்ம சாவு போலீசார் தீவிர விசாரணை
உளுந்தூர்பேட்டை அருகே ஆசிரியரையும் குழந்தைகளையும் தவிக்க விட்டு கள்ளக்காதலன் வீட்டில் வசித்து வந்த பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்
2. மதுரையில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை
இலங்கையை சேர்ந்த 23 பேர் கைதான விவகாரத்தில் மதுரையில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.
3. மெக்சிகோவில் கிரேன் விழுந்து தொழிலாளர்கள் 5 பேர் பலி
மெக்சிகோவில் கிரேன் விழுந்ததில் கட்டுமான தொழிலாளர்கள் 5 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
4. பாகிஸ்தானில் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து; 16 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் கராச்சி நகரில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்து உள்ளனர்.
5. கேரளாவுக்கு கடத்தி வரப்பட்ட 3.3 கிலோ தங்கம் பறிமுதல்
கேரளாவுக்கு வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 3.352 கிலோ எடை கொண்ட தங்கம் 3 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.