உத்தரகாண்டில் வரும் 17ந்தேதிக்குள் 1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அரசு முடிவு


உத்தரகாண்டில் வரும் 17ந்தேதிக்குள் 1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அரசு முடிவு
x
தினத்தந்தி 12 Sep 2021 7:32 PM GMT (Updated: 12 Sep 2021 7:32 PM GMT)

உத்தரகாண்டில் வரும் 17ந்தேதிக்குள் 1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது என அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.


டேராடூன்,


உத்தரகாண்டின் சுகாதார மந்திரி தன்சிங் ராவத் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, உத்தரகாண்டில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளை உள்ளடக்கிய 1,000 இடங்களில் தடுப்பூசி மையங்களை அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதனால், வருகிற 17ந்தேதிக்குள் 1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது என்ற அரசின் இலக்கு எட்டப்படும்.  கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை எதுவும் இல்லை.  வருகிற டிசம்பருக்குள் 100 சதவீத தடுப்பூசிகள் போடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story