மராட்டியத்தில் 2024-ல் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: நானா படோலே


மராட்டியத்தில் 2024-ல் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: நானா படோலே
x
தினத்தந்தி 12 Sep 2021 7:56 PM GMT (Updated: 12 Sep 2021 7:56 PM GMT)

மராட்டியத்தில் 2024-ல் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என நானா படோலே நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

துரோகம் செய்தனர்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் காங்கிரஸ் கட்சியை ஜமீன்தார்களுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார். இதற்கு பதில் அளித்து காங்கிரஸ் மாநில தலைவர் நானா படோலே கூறியதாவது:-

நான் சிறிய காங்கிரஸ் தொண்டன். சரத்பவாரின் கருத்து குறித்து நான் எதுவும் கூறமாட்டேன். கடந்த காலங்களில் காங்கிரஸ் பல்வேறு தலைவர்களை வளர்த்தது. ஆனால் அவர்கள் துரோகம் செய்துவிட்டனர் (சரத்பவார் காங்கிரசில் இருந்து வெளியேறி தேசியவாத காங்கிரசை தொடங்கியவர் ஆவார்).

காங்கிரஸ் ஆட்சி
என்னால் ஒன்றை மட்டும் கூற முடியும், 2024 பொது தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியை கைப்பற்றும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல அவர் சரத்பவாரின் கருத்தால் மகாவிகாஸ் கூட்டணிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றார். மேலும் அவர், மகாவிகாஸ் கூட்டணி அமைய சரத்பவார் தான் முக்கிய காரணம், அரசின் ரிமோட் கன்ட்ரோலாக அவர் இருப்பதாகவும் கூறினார்.

Next Story