தேசிய செய்திகள்

மோடி ஆட்சியில் வேலை இழப்பு: ராகுல்காந்தி + "||" + Rahul slams Modi govt over job losses

மோடி ஆட்சியில் வேலை இழப்பு: ராகுல்காந்தி

மோடி ஆட்சியில் வேலை இழப்பு: ராகுல்காந்தி
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், போர்டு நிறுவனம் இந்தியாவில் தனது வாகன உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளது பற்றிய பத்திரிகை செய்தியை வெளியிட்டார்.
இந்த முடிவால் 4 ஆயிரம் சிறு நிறுவனங்கள் மூடப்படும் என்று தொழில்துறையினர் கூறியிருப்பது அச்செய்தியில் இடம்பெற்றுள்ளது. அந்த பதிவில், ‘‘வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைக்கும், வேலை நாளான திங்கட்கிழமைக்கும் இடையிலான வித்தியாசத்தை முடிவுக்கு கொண்டு வந்ததுதான், மோடி ஆட்சியில் ஏற்பட்ட வளர்ச்சி. வேலையே இல்லாதபோது, அது ஞாயிற்றுக்கிழமையாக இருந்தால் என்ன? திங்கட்கிழமையாக இருந்தால் என்ன?’’ என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பூசி பணி எப்போது முடிவடையும்? மக்களவையில் ராகுல்காந்தி கேள்விக்கு மத்திய மந்திரி பதில்
கொரோனா தடுப்பூசி பணி எப்போது முடிவடையும் என்று மக்களவையில் ராகுல்காந்தி எழுப்பிய கேள்விக்கு மத்திய மந்திரி பாரதி பிரவிண் பவார் பதில் அளித்தார்.
2. ஆணவத்துக்கும் அறியாமைக்கும் தடுப்பு மருந்து கிடையாது; ராகுல்காந்திக்கு மத்திய மந்திரி ஹர்ஷ் வர்தன் பதில்
ஆணவத்துக்கும் அறியாமைக்கும் தடுப்பு மருந்து கிடையாது. காங்கிரஸ் கட்சி தங்கள் தலைமையை மாற்றுவது குறித்து ஆலோசிக்க வேண்டும் என ராகுல்காந்திக்கு சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பதிலடி கொடுத்துள்ளார்.
3. ஆட்டம் ஆரம்பம்... உத்தரப்பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் ஜிதின் பிரசாதா பா.ஜ.கவில் ஐக்கியம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் அரசியல் ஆலோசகராக இருந்த மறைந்த, ஜிதேந்திர பிரசாத்தின் மகன் ஜிதின் பிரசாதா. இவர் ஒரு காலத்தில் ராகுல் காந்திக்கு மிகவும் நெருங்கியவராக இருந்தார்.
4. நீல நிற ‘டிக்’குக்காகத்தான் அரசு போராடுகிறது, தடுப்பூசிக்கு மக்கள்தான் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்: ராகுல் காந்தி கிண்டல்
மத்திய அரசு நீல நிற ‘டிக்’குக்காகத்தான் போராடுவதாகவும், தடுப்பூசியை மக்கள்தான் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்றும் ராகுல் காந்தி மத்திய அரசை கிண்டல் செய்துள்ளார்.
5. ‘‘செயல்பட தவறிய வென்டிலேட்டரும், பிரதமரும்’’; ராகுல்காந்தி விமர்சனம்
பி.எம்.கேர்ஸ் நிதியத்தில் வாங்கப்பட்டு, பஞ்சாப் மாநிலத்தில் ஒரு ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்ட வென்டிலேட்டர்கள் செயல்படாமல் கிடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.