தேசிய செய்திகள்

உ.பி. தேர்தலை பிரியங்கா காந்தி தலைமையில் சந்திப்போம் - காங். மூத்த தலைவர் + "||" + Congress fighting the upcoming Assembly elections under the leadership of Priyanka Gandhi Says Salman Khurshid

உ.பி. தேர்தலை பிரியங்கா காந்தி தலைமையில் சந்திப்போம் - காங். மூத்த தலைவர்

உ.பி. தேர்தலை பிரியங்கா காந்தி தலைமையில் சந்திப்போம் - காங். மூத்த தலைவர்
உத்தரபிரதேச சட்டசபை தேர்தலை பிரியங்கா காந்தி தலைமையில் சந்திப்போம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
லக்னோ,

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பல்வேறு தரப்பினர் இடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்க உள்ளன.

இந்நிலையில், உத்தரபிரதேச சட்டசபை தேர்தலை காங்கிரஸ் பிரியங்கா காந்தி தலைமையில் சந்திக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய-மந்திரியுமான சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறுகையில், வரும் உ.பி.சட்டசபை தேர்தலை காங்கிரஸ் பிரியங்கா காந்தியின் தலைமையில் சந்திக்கும். தேர்தலில் நாம் வெற்றிபெறுவதை உறுதி செய்யவேண்டும் என்பதற்காக அவர் (பிரியங்கா காந்தி) கடுமையாக உழைக்கிறார். தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல் மந்திரி வேட்பாளர் யார்? என்பதை பிரியங்கா காந்தி பின்னர் அறிவிப்பார்’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் 100 தொகுதிகளில் போட்டி: ஒவைசி
உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்கிறது. இதையொட்டி, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதின் ஒவைசி நேற்று உத்தரபிரதேசத்துக்கு சென்றார்.
2. உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் சிறிய கட்சிகளுடன் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன: சமாஜ்வாடி கட்சி
உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் சிறிய கட்சிகளுடன் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.