அசாமில் சட்டவிரோதமாக தங்கி இருந்த மியான்மர் நாட்டினர் 26 பேர் கைது


அசாமில் சட்டவிரோதமாக தங்கி இருந்த மியான்மர் நாட்டினர் 26 பேர் கைது
x
தினத்தந்தி 13 Sep 2021 3:53 AM GMT (Updated: 13 Sep 2021 3:53 AM GMT)

அசாமில் சட்டவிரோதமாக தங்கி இருந்த மியான்மர் நாட்டினர் 26 பேரை போலீசார் கைது செய்தனர்.

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தின் கவுகாத்தி மாவட்டம் ரஹ்பரி பகுதியில் வெளிநாட்டை சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரஹ்பரி பகுதியில் உள்ள ஒரு விடுதியில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில் சந்தேகத்திற்கு இடமாக தங்கி இருந்த 10 பெண்கள் உள்பட 26 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த 26 பேரும் மியான்மர் நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும் அவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து தங்கி இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். 

மேலும், அவர்கள்கள் அனைவரும் போலியாக தயாரித்து வைத்திய இந்திய அடையாள அட்டைகளான ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற பல்வேறு ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றினர். 

இதையடுத்து, சட்டவிரோதமாக மியான்மர் நாட்டினர் 26 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட 26 பேரும் அசாமில் இருந்து டெல்லி செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

Next Story