மத்திய, மேற்கு இந்தியாவில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்


மத்திய, மேற்கு இந்தியாவில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 13 Sep 2021 5:54 AM GMT (Updated: 13 Sep 2021 5:54 AM GMT)

மத்திய, மேற்கு இந்தியாவில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, 

வடமேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் ஒடிசாவில் கனமழை வெளுத்து வாங்கியது.  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெற்று  தொடர்ந்து நகர்ந்து இன்று காலை ஒடிசாவில் கரையக் கடந்தது.  

இதனால், இன்று காலை ஒடிசாவில் மிக கனமழை பெய்தது. இந்த நிலையில்,  இன்று (செப்டம்பர் 13)  ஒடிசா மற்றும் சத்தீஷ்கர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து   மிக மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்  கணித்துள்ளது. 

அதேபோல், மத்திய பிரதேசத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மராட்டியத்திலும் அடுத்த இரு தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 

 ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது  மேற்கு வடமேற்கு  திசையில்  நகர்ந்து வடக்கு சத்தீஷ்கர் மற்றும்  மத்திய பிரதேசம் நோக்கி நகர்ந்து  அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Next Story