தேசிய செய்திகள்

அடுத்த ஆண்டு முதல் மீண்டும் விமான சேவையை துவங்குகிறது ஜெட் ஏர்வேஸ் + "||" + Jet Flights Resume In Q1 2022, Shorter International Flights In 2nd Half

அடுத்த ஆண்டு முதல் மீண்டும் விமான சேவையை துவங்குகிறது ஜெட் ஏர்வேஸ்

அடுத்த ஆண்டு முதல் மீண்டும் விமான சேவையை துவங்குகிறது ஜெட் ஏர்வேஸ்
ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் தனது சேவையை தொடங்க உள்ளது.
புதுடெல்லி,

கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமையால் 2019-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் தனது சேவையை நிறுத்தியது ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம். ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த ஜெட் ஏர்வேஸ் கொஞ்சம் கொஞ்சமாகத் தனது சந்தை மதிப்பை இழந்து விமான சேவையில் இருந்து வெளியேறியது. 

இந்த நிலையில், ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் தனது சேவையை தொடங்க உள்ளது. அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு முதல் உள்நாட்டு விமான சேவையை தொடங்க ஜெட் ஏர்வேஸ் தயாராகி வருகிறது. 

முதல் விமானமாக டெல்லி - மும்பை இடையே இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்கள் அடுத்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு முதல் இயக்கப்படும் என்று விமானம் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. தலீபான்கள் ஆட்சியில் ஆப்கானிஸ்தானில் தரையிறங்கிய முதல் வெளிநாட்டு விமானம்
தலீபான்கள் உடனான அரசியல் சிக்கல்கள் காரணமாக உலக நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கான விமான போக்குவரத்தை தொடர்ந்து நிறுத்தி வைத்துள்ளன.
2. ஆப்கானிஸ்தான் உடனான விமான சேவை நாளை தொடக்கம்: பாகிஸ்தான்
ஆப்கானிஸ்தானை தலீபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியதும் அங்கிருந்து தப்பிச்செல்வதற்காக ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான ஆப்கான் மக்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்தததால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
3. பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
4. காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து என அறிவிப்பு
விமான நிலையங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவை; மத்திய மந்திரியிடம், கவர்னர் தமிழிசை வலியுறுத்தல்
புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கவேண்டும் என்று மத்திய மந்திரியிடம், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தினார்.