தேசிய செய்திகள்

ஏர் இந்தியா விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு... அவசர அவசரமாக தரையிறக்கம் + "||" + Technical snag Air India Flight to Sharjah lands safely at T'puram airport after take-off

ஏர் இந்தியா விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு... அவசர அவசரமாக தரையிறக்கம்

ஏர் இந்தியா விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு... அவசர அவசரமாக தரையிறக்கம்
திருவனந்தபுரத்தில் இருந்து இன்று காலை சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
திருவனந்தபுரம்,

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 7 மணிக்கு ஐக்கிய அரபு அமீரத்தின் சார்ஜா நகருக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. 

அந்த விமானத்தில் 170 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் உள்பட மொத்தம் 176 பேர் பயணம் செய்தனர். புறப்பட்டு 30 நிமிடங்களில் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. 

உடனடியாக துரிதமாக செயல்பட்ட விமானி விமானத்தை மீண்டும் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பி பத்திரமாக தரையிறக்கினார். இதனால், 176 பேரும் எந்த வித பாதிப்பும் இன்றி உயிர் தப்பினர். பின்னர் 170 பயணிகளும் மாற்று விமானம் மூலம் சார்ஜா புறப்பட்டு சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் மங்களூரு - கோவை இடையே கூடுதல் விமானங்களை இயக்க திட்டம்
ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் மங்களூரு - கோவை இடையே கூடுதல் விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
2. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்க மேலும் ஒரு விமானம் காபூல் செல்கிறது
ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இன்று மதியம் மேலும் ஒரு விமானம் காபூல் செல்கிறது.
3. ஏர் இந்தியா விமானம் திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறக்கம்
ஏர் இந்தியா விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
4. நடுவானில் பறந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்திற்குள் கிடந்த வவ்வால் - விமானத்தை அவசரமாக தரையிறக்கிய விமானி
டெல்லியில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் உயிரிழந்த நிலையில் வவ்வால் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
5. ஏர் இந்தியா இணையதளத்தில் மிகப்பெரிய சைபர் தாக்குதல்: 45 லட்சம் பேரின் தரவுகள் கசிந்தன
சுமார் 45 லட்சம் பயணிகளின் கிரெடிட் கார்டு உள்ளிட்ட விவரங்கள் கசிந்துள்ளது என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.