தேசிய செய்திகள்

பெகாசஸ் விவகாரம்: சுப்ரீம் கோர்ட் உரிய உத்தரவு பிறப்பிக்கும் + "||" + Pegasus case: The Supreme Court will issue an appropriate order

பெகாசஸ் விவகாரம்: சுப்ரீம் கோர்ட் உரிய உத்தரவு பிறப்பிக்கும்

பெகாசஸ் விவகாரம்:  சுப்ரீம் கோர்ட் உரிய உத்தரவு பிறப்பிக்கும்
பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட கோரிய வழக்கில் ரிட் மனுக்கள் மீது 2 அல்லது 3 நாட்களுக்குள் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

இஸ்ரேல் அரசு தயாரித்த பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் நாட்டில் அரசியல் கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட பலரது செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்டன. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாக ஏற்படுத்தியது. 

மத்திய அரசு உரிய விளக்கம் தரக் கோரி ஒட்டுமொத்தமாக அனைத்து எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தை முடக்கின. இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

மேலும் மூத்த பத்திரிகையாளர்கள் என்.ராம் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் பெகாசஸ் ஒட்டு கேட்பு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர். உச்சநீதிமன்றத்தில் பெகாசஸ் தொடர்பாக 9 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வருகிறது.

இந்நிலையில்,  மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிந்துகொள்ள தேவையான, நியாயமான வாய்ப்புகள் வழங்கப்பட்டன. வாய்ப்புகள் வழங்கியும் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய தயாராக இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளதற்கு சுப்ரீம் கோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் பெகாசஸ் விவகாரத்தில் வல்லுநர் குழுவை அமைக்க தயாராக இருப்பதாகவும் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட கோரிய வழக்கில் ரிட் மனுக்கள் மீது 2 அல்லது 3 நாட்களுக்குள் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பெகாசஸ் விவகாரம்: “பல சட்ட மீறல்களை வெளிக் கொண்டு வரும்” - ப.சிதம்பரம்
பெகாசஸ் விவகாரம், அரசின் பல சட்ட மீறல்களை வெளிக் கொண்டு வர உள்ளதாக முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
2. பெகாசஸ் விவகாரம்: சிறப்பு நிபுணர் குழு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் 3 பேர் கொண்ட சிறப்பு நிபுணர் குழு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. பெகாசஸ் விவகாரம்: விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
4. பெகாசஸ் விவகாரம்: பிரதமர் மோடி ஏன் பேச மறுக்கிறார்? - ப.சிதம்பரம் கேள்வி
பெகாசஸ் விவகாரத்தில் எல்லாத் துறைகளின் சார்பிலும் பதிலளிக்க வேண்டிய பிரதமர் மோடி ஏன் பேச மறுக்கிறார்? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
5. பெகாசஸ் விவகாரம்: மாநிலங்களவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த தி.மு.க. எம்.பி.க்கள்
பெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க வலியுறுத்தி மாநிலங்களவைக்கு தி.மு.க. எம்.பி.க்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.