தேசிய செய்திகள்

ஆப்கானிஸ்தான் சிறையில் இருந்து கேரளாவை சேர்ந்த 25 ஐ.எஸ் ஆதரவாளர்கள் விடுவிப்பு ; இந்தியாவுக்கு ஆபத்து + "||" + 25 Indian ISIS sympathisers may sneak into India from Afghanistan: Intelligence report

ஆப்கானிஸ்தான் சிறையில் இருந்து கேரளாவை சேர்ந்த 25 ஐ.எஸ் ஆதரவாளர்கள் விடுவிப்பு ; இந்தியாவுக்கு ஆபத்து

ஆப்கானிஸ்தான்  சிறையில் இருந்து கேரளாவை சேர்ந்த 25 ஐ.எஸ் ஆதரவாளர்கள் விடுவிப்பு ; இந்தியாவுக்கு ஆபத்து
ஆப்கானிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 25 ஐஎஸ் ஆதரவாளர்களால் இந்தியாவுக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி;

உலகின் பல நாடுகளில் இயங்கி வரும் ஐஎஸ் அமைப்பால்  அமைப்பால் ஈர்க்கப்பட்டு, கேரளாவைச் சேர்ந்த 25 பேர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆப்கானிஸ்தான் சென்றனர். அனைவரும் கடந்த 2016 முதல் 2018ம் ஆண்டுக்கு இடையில் பல்வேறு காலகட்டங்களில் ஆப்கானிஸ்தானுக்கு திருட்டுதனமாக தப்பிச் சென்றனர். தற்போது, ஆப்கானிஸ்தான் நாடு தலீபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதனால் , சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ள  ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அவர்களில், இந்தியாவை சேர்ந்த ஐ.எஸ் ஆதரவாளர்கள் 25 பேரும் அடங்குவர் என்று இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உளவுத்துறை வட்டாரங்கள்  கூறி உள்ளதாவது:-

'கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் சிறைகளில் இருந்து கேரளாவைச் சேர்ந்த 25 ஐ.எஸ் அமைப்பு ஆதரவாளர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் மீண்டும் இந்தியாவுக்குள் நுழைய வாய்ப்புள்ளது. தேசிய புலன் விசாரணைக் குழுவின் (என்.ஐ.ஏ) பட்டியலில் உள்ள இவர்களால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளது . 

எனவே, மத்திய, மாநில அரசுகள் எச்சரிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் விமானங்கள் கண்காணிக்கப்பட்டு வந்தன. தற்போது கடலோர மாவட்டங்கள், சர்வதேச எல்லைகள் உன்னிப்பாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


தொடர்புடைய செய்திகள்

1. தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு நிலம், பணம் வழங்கப்படும் - தலீபான்
தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு நிலம், பணம் வழங்கப்படும் என்று தலீபான்கள் உறுதியளித்துள்ளனர்.
2. ஆப்கானிஸ்தான் விவகாரம்: ரஷியா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை - அமெரிக்கா அறிவிப்பு
ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக ரஷிய தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
3. ஆப்கான் சிறுமிகள் மேல்நிலை கல்வி கற்க விரைவில் அனுமதி- தலீபான்கள் உறுதி
ப்கானிஸ்தானில் உள்ள அனைத்து சிறுமிகளும் மேல்நிலை கல்வி கற்க தலீபான்கள் விரைவில் அனுமதி வழங்குவார்கள் என ஐ.நா.வின் மூத்த அதிகாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
4. ஆப்கானிஸ்தானில் மரங்களை வெட்ட தடை: தலீபான்கள் அதிரடி உத்தரவு
ஆப்கானிஸ்தானில் மரங்களை வெட்ட தடை விதித்து தலீபான்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
5. ஆப்கானிஸ்தான் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்: ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு
ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்த ஜனநாயக அரசை அகற்றிவிட்டு புதிய இடைக்கால அரசை தலீபான்கள் அமைத்துள்ளனர்.