தேசிய செய்திகள்

காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் காலமானார்..! + "||" + Former Union Minister and senior Congress leader Oscar Fernandes passes away, tweets Congress party.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் காலமானார்..!

காங்கிரஸ் மூத்த  தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் காலமானார்..!
இந்திய தேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும்,முன்னாள் மத்திய அமைச்சருமான ஆஸ்கர் பெர்னாண்டஸ் இன்று காலமானார்.
புதுடெல்லி

மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆஸ்கர் பெர்னாண்டஸ் தனது 80 வது வயதில் இன்று காலமானார்.அவர் இன்று  மதியம் மங்களூரு யெனெபோயா மருத்துவமனையில் காலமானார்.

கடந்த ஜூலை மாதம் மூளையில் இருந்து இரத்தக் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்த முன்னாள் அமைச்சர் பெர்னாண்டஸ், தனது வீட்டில் யோகா பயிற்சி செய்யும் போது தலையில் காயம் ஏற்பட்டு மங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இதனையடுத்து,அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.