தேசிய செய்திகள்

ஆஸ்கர் பெர்னாண்டஸ் மறைவு: பிரதமர் மோடி இரங்கல் + "||" + Oscar Fernandes' death: Prime Minister Modi's condolences

ஆஸ்கர் பெர்னாண்டஸ் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

ஆஸ்கர் பெர்னாண்டஸ் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
மூத்த காங்கிரஸ் தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆஸ்கர் பெர்னாண்டஸ் தனது 80 வது வயதில் இன்று காலமானார்.அவர் இன்று  மதியம் மங்களூரு யெனெபோயா மருத்துவமனையில் காலமானார்.

கடந்த ஜூலை மாதம் மூளையில் இருந்து இரத்தக் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்த முன்னாள் அமைச்சர் பெர்னாண்டஸ், தனது வீட்டில் யோகா பயிற்சி செய்யும் போது தலையில் காயம் ஏற்பட்டு மங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இதனையடுத்து,அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். 

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

 'மாநிலங்களவை உறுப்பினர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் மறைவை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.

இந்த சோக தருணத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகளுக்கு எனது ஆதரவையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்', என்று குறிப்பிடப்பட்டுள்ளது.