தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் இதுவரை 4½ கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை: சுகாதாரத்துறை + "||" + Karnataka breaches 4.5 crore mark in Covid testing

கர்நாடகத்தில் இதுவரை 4½ கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை: சுகாதாரத்துறை

கர்நாடகத்தில் இதுவரை 4½ கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை: சுகாதாரத்துறை
கர்நாடகத்தில் இதுவரை 4½ கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

4½ கோடி பேருக்கு பரிசோதனை

கர்நாடகத்தில் ஒரு லட்சத்து 176 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 803 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 4 கோடியே 52 லட்சத்து 94 ஆயிரத்து 928 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 29 லட்சத்து 61 ஆயிரத்து 735 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கொரோனா பாதிப்புக்கு மேலும் 17 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 504 ஆக உயர்ந்துள்ளது.

16 ஆயிரம் பேருக்கு சிகிச்சை

802 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியதை அடுத்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 29 லட்சத்து 7 ஆயிரத்து 548 ஆக அதிகரித்துள்ளது. 16 ஆயிரத்து 656 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.பெங்களூரு நகரில் 255 பேர், தட்சிண கன்னடாவில் 153 பேர், ஹாசனில் 30 பேர், மைசூருவில் 36 பேர், குடகில் 63 பேர், உடுப்பியில் 90 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு நகரில் 6 பேரும், தட்சிண கன்னடா, பெலகாவி, ஹாசன், மைசூருவில் தலா 2 பேரும் என மொத்தம் 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம்: தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு பரிசோதனைகளை அதிகரிக்க கலெக்டர்களுக்கு அறிவுரை
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,600 ஐ நெருங்கும் நிலையில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
2. கர்நாடகத்தில் தொழில் தொடங்க நடைமுறைகளை எளிமைப்படுத்தி உள்ளோம்: மந்திரி முருகேஷ் நிரானி
தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
3. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
4. கர்நாடகத்தில் 3 மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் பா.ஜனதா வெற்றி
கர்நாடகத்தில் 3 மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றுள்ளது. பெலகாவியில் நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்திய மராட்டிய அமைப்பு படுதோல்வியை சந்தித்தது.
5. கர்நாடகத்தில் இன்று 6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு
கர்நாடகத்தில் இன்று 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன.